Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
, புதன், 25 மே 2022 (23:48 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். அவர் தனது புதிய முயற்சிகளுடன் எப்போதும் புதுமை விரும்பியாகவே உள்ளதால் இளைய நடிகர்களுக்கு போட்டியாக உள்ளார்.

இவரது நடிப்பில்  உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில், கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பகத்பாசில் நரேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில்,  பேசிய கமல்,  நான்கு ஆண்டுகளாக என் படங்கள் வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்  நான் ஒரு ரூபாய் செலவு செய்தால், என் ரசிகர்கள் ரூ.20 செலவுசெய்வார்கள், லோகேஷ் கனகராஜிற்கு இப்போது நன்றி கூற மாட்டேன். வேறு மாதிரி நன்றி சொல்லுகிறேன்.இப்படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இது வெற்றிப்படமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஷிவங்கி பிறந்த நாள் கொண்டாட்டம் !