Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ப்ரமோஷன்… பிரபல குடிநீர் பாட்டிலில் விக்ரம் Rappers… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த ப்ரமோஷன்… பிரபல குடிநீர் பாட்டிலில் விக்ரம் Rappers… வைரலாகும் புகைப்படம்!
, செவ்வாய், 24 மே 2022 (15:12 IST)
விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்துக்கான ப்ரமோஷன்கள் தொடங்கியுள்ளன.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது பிரபல குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி பாட்டிலில் விக்ரம் படத்தின் புகைப்படங்கள் இடம்பெற்ற ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக விக்ரம் படத்தின் புகைப்படம் மற்றும் தலைப்பைத் தாங்கிய வாசனைத் திரவியங்கள் இப்போது கமலின் காதி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷனாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர்னு வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… வைரல் வீடியோ!