Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதம் மேனனால் லியோ படத்துக்கு வந்த சிக்கல்…தயரிப்பாளர் லலித் குமார் எடுத்த முடிவு!

Advertiesment
கௌதம் மேனனால் லியோ படத்துக்கு வந்த சிக்கல்…தயரிப்பாளர் லலித் குமார் எடுத்த முடிவு!
, வியாழன், 9 மார்ச் 2023 (08:42 IST)
சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு பைனான்ஸ் மட்டுமே கொடுத்து வந்தார்.

இதனால் இவரிடம் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு திடீரென்று கொரோனாவால் இறந்ததை அடுத்து இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. அப்படி கடன் வாங்கியவர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் மேனன் விரைவில் தான் வாங்கிய பணத்தை குடும்பத்தாருக்கு திருப்பி அளிப்பதாக உறுதி அளித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னமும் அவர் அந்த பணத்தைக் கொடுக்கவில்லை என்பதால், அவரின் குடும்பம் இது சம்மந்தமாக தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு ரெட் கார்ட் போட அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டது.

இதனால் கௌதம் மேனன் தற்போது நடித்து வரும் லியோ படத்தின் ரிலீஸில் ஏதேனும் சிக்கல் உருவாகலாம் என்பதால், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கௌதம் மேனன் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பாலு குடும்பத்துக்குக் கொடுக்க சம்மதித்துள்ளாராம். இதற்கு கௌதம் மேனனும் சம்மதம் சொல்லி இருப்பதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டா?... முன்னணி தயாரிப்பாளர் கொடுக்கும் அழுத்தம்!