Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் தமிழ் சினிமாவின் ஆரம்பம் என்றார் கமல் – எந்த படத்தைத் தெரியுமா?

Advertiesment
இதுதான் தமிழ் சினிமாவின் ஆரம்பம் என்றார் கமல் – எந்த படத்தைத் தெரியுமா?
, புதன், 11 நவம்பர் 2020 (11:55 IST)
தமிழ் சினிமாவின் பென்ச் மார்க் படங்களில் ஒன்றான ஆரண்யகாண்டம் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினாராம் கமல்.

தமிழ் சினிமாவில் வெளியான சிறப்பான படங்களில் ஆரண்ய காண்டம் திரைப்படமும் ஒன்று. இந்த படம் வெளியான போது கவனம் பெறாமல் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். இந்நிலையில் இப்போது இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த படத்தைப் பற்றிய நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் பாடகருமான எஸ் பி பி சரண் ‘இந்த படத்தை கமலுக்கு போட்டுக்காட்டிய போது வியந்து பார்த்தார். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு கதைக்கு கெட்ட வார்த்தைகள் தேவை என்றால் அதை வைப்பதில் தவறில்லை. இதுதான் தமிழ் சினிமாவின் புதிய ஆரம்பம் எனக் கூறினார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முந்தானை முடிச்சு ரீமேக்கில் யாஷிகா ஆனந்த்… எந்த கேரக்டர் தெரியுமா?