கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கமலஹாசன் 32 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கமலஹாசன் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் தூங்காவனம். இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. அதன்பின்னர் விஸ்வரூபம் 2 வெளிவந்தாலும் அந்த படம் ஏற்கனவே பாதிக்குமேல் எடுத்து முடிக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது
அதனை அடுத்து சபாஷ் நாயுடு மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களில் கமல்ஹாசன் நடித்து வந்த நிலையில் அந்த படங்கள் வருடக்கணக்கில் படப்பிடிப்பு முடிக்கப் படாமல் உள்ளன
இந்த நிலையில் கமலஹாசனின் திரைப்படம் ஒன்று 32 நாட்களில் முடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. லோகேஷ் கனகராஜ் வேகமாக படம் எடுப்பார் என்றாலும் அவர் இம்முறை கமல்ஹாசனுடன் இணைந்துள்ளதால் 32 நாட்களில் முடிய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது
மேலும் பிக்பாஸ் மற்றும் தேர்தல் பணிகள் கமல்ஹாசனுக்கு இருப்பதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகலாம் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது