Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாத்த ஆடுறார்… வைரல் டிக்டாக் வீடியோ- உச்சிமுகர்ந்த கமல்!

Advertiesment
அண்ணாத்த ஆடுறார்… வைரல் டிக்டாக் வீடியோ- உச்சிமுகர்ந்த கமல்!
, சனி, 20 ஜூன் 2020 (08:29 IST)
டிக்டாக்கில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு சூப்பரான நடனமாடிக் கவனத்தை ஈர்த்த அஸ்வின் குமார் என்ற நடிகரை கமல் பாராட்டியுள்ளார்.

கமலின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் எப்போதும் இருந்து வருகிறது. இந்த பாடலுக்கு தற்போது வரை ரசிகர்கள் உள்ளனர். டிக்டாக்கில் இந்த பாடலுக்கு பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி வளர்ந்து வரும் நடிகரான அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடும் ஒரு வீடியோ கடந்த வாரங்களில் வைரல் ஆனது. பலரும் அவரின் வீடியோவை பார்க்க வைரலான வீடியோ இப்போது கமலின் பார்வைக்கும் சென்றுள்ளது. அந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த கமல் ‘நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!’ எனப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே - ஆபாசப் பட நடிகை கோபம்!