Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'கமல் 234 'படத்தின் பூஜை தொடக்க விழா.... ரெட் ஜெயிண்ட் மூவிஸ் புதிய அப்டேட்

KAMAL -MANIRATHNAM
, வியாழன், 26 அக்டோபர் 2023 (19:08 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர்  இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் மணிரத்னம் நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து  கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார். இப்படத்தில் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமல்-மணிரத்னம் இணையும் இப்படத்தின் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்க திரிஷா,  வித்யாபாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வரும் நவம்பர் 7 ஆம் இப்பட முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் இன்று இப்படத்தின் பூஜை தொடக்கவிழாவின்போது எடுத்த  கமல் மற்றும் மணிரத்னம்  இவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு கோயில் கட்டி, சிலை வைத்து வணங்கும் ரசிகர்