Publish Date: Fri, 08 Sep 2023 (15:58 IST)
Updated Date: Fri, 08 Sep 2023 (16:00 IST)
நடிகர் ஜி மாரிமுத்து விழா நாயகன் என்ற படத்தில் நடித்த நிலையில் அந்த படத்தில் அவர் இறந்துவிட்டது போன்ற காட்சியும் அவரது மறைவுக்கு இரங்கல் போஸ்டர் அடிப்பது போன்ற காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு என் நடிகர் மாரிமுத்து தன்னுடைய அஞ்சலி போஸ்டர் நின்று தானே செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பகவான் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் உருவான விழா நாயகன் படத்தில் தான் அவர் கடைசியாக நடித்துள்ளார். தான் இறப்பது போன்ற கண்ணீர் போஸ்டர் அடிக்கப்பட்ட போஸ்டரின் முன் அவர் நின்று செல்பி எடுத்துக் கொண்ட போது அவருடன் பட குழுவினர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது