இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியினர் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிகையாகக் கலக்கி வருகிறார். 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்று வெற்றியோடு சினிமாவில் கால்பதித்தார்.
நடிகையாக களமிறங்குவதற்கு முன்பாக அவர் உதவி இயக்குனராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவரும் இந்த ஆண்டு வெளியான லோகா படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்துள்ளார். அந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது.
இதையடுத்து கல்யாணி கதாநாயகியாக நடிக்கும் தமிழ்ப் படம் நேற்று பூஜையோடு தொடங்கியுள்ளது. அந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். திரவியம் என்ற அறிமுக இயக்குனர் இயக்க வினோஷ் கிஷன் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.