Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் புதிய முயற்சி.. கமல் பண்பாட்டு மையம் ஆரம்பம்.. உலக நாயகன் அறிவிப்பு..!

Advertiesment
தமிழில் புதிய முயற்சி.. கமல் பண்பாட்டு மையம் ஆரம்பம்.. உலக நாயகன் அறிவிப்பு..!

Mahendran

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:49 IST)
தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது என உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார். 
 
இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
 
பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் மழை பெய்தால்..? - நிபந்தனை விதித்த வனத்துறை!