Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிக்கு லேட்டாக வாழ்த்திய கமல் கூறிய காரணம் என்ன தெரியுமா?

Advertiesment
rajinikanth
, செவ்வாய், 12 டிசம்பர் 2017 (22:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இந்தியாவே திரண்டு வாழ்த்துக்களை கூறி பெருமைப்படுத்தியது. இந்திய அளவில் திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் ரசிகர்களும் டுவிட்டரிலும் போனிலும் அவரை வாழ்த்திய நிலையில் ரஜினியின் 40 ஆண்டுகால உயிர் நண்பர் கமல் டுவிட்டரில் கூட ஒரு வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்ற குரல் ஒரு ஓரத்தில் ஒலித்து வந்தது

இந்த நிலையில் சற்றுமுன் கமல் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தான் லேட்டாக வாழ்த்தியது ஏன்? என்று ஒரு காரணத்தையும் வழக்கம் போல் அவரது பாணியில் கூறியுள்ளார். கமல் பதிவு செய்த டுவிட் இதுதான்:

சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்'

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தே.ப.பா.க மயில்சாமியின் புது கட்சி?? வைரலாகும் போஸ்டர்!!