Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிகாந்துக்கு மகள் செளந்தர்யாவின் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து

Advertiesment
ரஜினிகாந்துக்கு மகள் செளந்தர்யாவின் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து
, செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:31 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது அப்பா ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஒரு அப்பாவின் ஆசீர்வதிக்கப்பட்ட மகளாக தனது வாழ்த்துகளை டிவிட்டரில் கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், மன்னன், மேதை என்றெல்லாம் ஹேஷ் டேக் போட்டு, ரஜினிகாந்த்தின் பென்சில் வரைபடங்களைத் தொகுத்து ஒரு வீடியோவாக  பதிவு செய்துள்ளார்.
webdunia
அதில், ரஜினி நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களுடன், அந்தக் கதாபாத்திரங்களின் கெட்டப்பின் பென்சில் ட்ராயிங் தொகுப்பை  வெளியிட்டுள்ளார். அதில்,  காளி, சின்னராசு, முரளி, சக்கரவர்த்தி, மூக்கையன், மாணிக்கம், காளிமுத்து, அலெக்ஸ் பாண்டியன்,  ஸ்ரீராகவேந்திரர், பில்லா, விஸ்வநாத், சூர்யா, கிருஷ்ணன், பாலு, பாண்டியன் வானவராயன், பரட்டை, தீபக் என கதாபாத்திரங்கள் வரிசைபடுத்தியுள்ளார். ரஜினி நடித்த படங்களின் இந்தப் பாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டவை. தன் அழகுணர்ச்சியை திறம்படத்  தொகுத்து டிவிட்டர் பதிவில் வெளியிட்டு தந்தைக்கு மகள் சொல்லும் வாழ்த்தாக சௌந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார். இதனை  பார்த்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி பாடப்புத்தகத்தில் மெர்சல் விஜய் புகைப்படம்