பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம், இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான ஆர் டி எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்போது ஷேன் நிகம் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். மெட்ராஸ்காரன் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். கதாநாயகியாக நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா நடிக்கிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கலையரசன் “தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களேக் கொடுக்கின்றனர். ஆனால் மலையாள சினிமாவில் அப்படி இல்லை. ஒருவர் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடிக்கலாம். அதனால் இனிமேல் நான் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். கதையில் சாவு என்று இருந்தாலே என் பெயரை எழுதிவிடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.