ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்த படத்தைத் தமிழ்நாட்டில் பிசாசு 2 உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் வாங்கி வெளியிடுகிறார். கேம்சேஞ்சர் படத்தை அவர் 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மிக அதிக தொகையாக ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.