மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில், நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த பிசாசு 2 என்ற திரைப்படம், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடிக்க, விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ள படக்குழுவினர், மார்ச் வெளியீடு என்று அதில் அறிவித்துள்ளனர். இதையடுத்து, மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.