Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைதி 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள கமல்ஹாசன்?... விஜய் வருவாரா?

கைதி 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள கமல்ஹாசன்?... விஜய் வருவாரா?

vinoth

, திங்கள், 15 ஜூலை 2024 (07:58 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டேன். இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். அடுத்த ஆண்டு லோகேஷ் தயாராக இருக்க சொல்லியுள்ளார். அடுத்த ஆண்டு பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான்.” எனக் கூறியிருந்தார்.

லோகேஷ் தற்போது உருவாகியிருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கைதி 2 படத்தை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கைதி திரைப்படம் LCU வாக உருவாகவுள்ள நிலையில் அதில் நடிக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் கைதி 2 படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. ஆனால் LCU வில் இடம்பெற்ற மற்ற நடிகர்கள் அனைவரும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?... வெளியான தகவல்!