Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூலி படத்தில் போதைப் பொருள் சமாச்சாரங்கள் இருக்காது… லோகேஷ் கொடுத்த அப்டேட்!

கூலி படத்தில் போதைப் பொருள் சமாச்சாரங்கள் இருக்காது… லோகேஷ் கொடுத்த அப்டேட்!

vinoth

, புதன், 10 ஜூலை 2024 (07:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கிய கடந்த சில படங்கள் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தியதாக இருந்தன. அது முதலில் ரசிக்கப்பட்டாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு திகட்ட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இப்போது அவர் இயக்கி வரும் கூலி திரைப்படம் போதைப் பொருள் பற்றியக் கதைக்களம் இல்லை என லோகேஷே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படம் துறைமுகத்தில் நடக்கும் தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் நடந்த திடீர் மாற்றம்… ஜப்பானுக்கு பதில் இந்த நாட்டில்தான் ஷூட்டிங்கா?