Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த வருசம் பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான்… கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!

அடுத்த வருசம் பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான்… கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!

vinoth

, புதன், 10 ஜூலை 2024 (07:12 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டேன். இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். அடுத்த ஆண்டு லோகேஷ் தயாராக இருக்க சொல்லியுள்ளார். அடுத்த ஆண்டு பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான்.” எனக் கைதி 2 படம் பற்றி பேசியுள்ளார். இதற்கிடையில் கார்த்தி டாணாகாரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பிரஸ்மீட் இல்லை 1000 பிரஸ்மீட் கொடுக்க தயாராக இருக்கிறோம்.. விஜய் கட்சி ஆதரவாளர்..!