Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Heart melting.... ஓ மை கடவுளே "கதைப்போமா" லைவ் சிங்கிங்!

Advertiesment
Heart melting.... ஓ மை கடவுளே
, ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:05 IST)
அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்திருந்த  "ஓ மை கடவுளே" படம் பிப்ரவரி 14ம் தேதி  திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. இப்படத்தில் கதாநாயகியாக  ரித்திகா சிங் நடிக்க  வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து  படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்தார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் - ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் கதை யதார்த்தமாக இருந்ததால் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற "கதைப்போமா" என்ற பாடல் பலரது பேவரைட் பாடலாக மாறியது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்த இப்பாடலை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் ரயில் விட்டு ரசிகர்கள் ரசித்தனர். இந்நிலையில் தற்போது லியோன் ஜேம்ஸ் கதைப்போமா பாடலை வீட்டில் இருந்தபடியே பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுப்பு மேல் ஏறி உட்கார்ந்து அல்வா கிண்டும் புட்ட பொம்மா பியூட்டி....!