Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி யோசித்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்திற்கு நல்லது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:49 IST)
முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருந்த ’800’ என்ற திரைப்படம் தற்போது அரசியல் ஆக்கப்பட்டு விட்டது என்பதும் இதுவரை திரையுலகினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சியினர் கூட இது குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடம் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில் இதுதான்:
 
800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்’ 
 
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, திரையுலகினர் என ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விஜய் சேதுபதி தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments