Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதிக்கு பாஜகவில் இருந்து குவியும் ஆதரவு!

Advertiesment
விஜய் சேதுபதிக்கு பாஜகவில் இருந்து குவியும் ஆதரவு!
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (08:47 IST)
முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது எவ்வித தவறும் இல்லை என அண்ணாமலை கருத்து. 
 
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.   
 
தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.  
 
கடந்த சில நாட்களாக இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது எவ்வித தவறும் இல்லை. 
 
ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க எல்லா உரிமையும் உள்ளது. விஜய் சேதுபதி இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதில் அரசியலை கலப்பது சரியல்ல என தனது ஆதரவு குரலை குஷ்புவை தொடர்ந்து அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவருடன் பேச விருப்பமில்லை: ட்ரம்ப் சொல்லும் அந்த ’அவர்’ யார்?