முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்த முக்கியமான அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
	
 
									
										
								
																	
	
	இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ”800” திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஈழப்படுகொலையின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அரசியல் கட்சிகள், திரைத்துறை, பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து வெளியேற வேண்டும் என கூறிவந்த நிலையில், சிலர் ‘இந்த படத்தில் நடித்தால் உங்களை மக்கள் செல்வன் என அழைக்க மாட்டோம்” என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் தனது நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து விஜய் சேதுபதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? இல்லையா? என்பதை ஓரிரு தினங்களில் அவரே அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.