இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகிறதா பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் படம்?

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (08:21 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் காட்சிகளில் பிரசாந்த் நீலுக்கும் ஜூனியர் என் டி ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலதிக தகவலாக இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு பாகங்களையும் முழுவதும் படமாக்கி முடித்துவிட்டு இரண்டையும் ஒரே ஆண்டில் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments