மீண்டும் வருகிறது ‘புதிய பாதை’… ரீமேக் செய்து நடிக்கும் பார்த்திபன்!

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (08:17 IST)
தமிழ் சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். ஆனால் அந்த வித்தியாசத்தில் சில சமயம் கிருக்குத்தனம் அதிகமாகி சொல்லவந்த விஷயம் நழுவிவிடுவதால் அவரின் பெரும்பாலான படைப்புகள் பெருவாரியான வெற்றியைப் பெறுவதில்லை.

சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசமாக எதுவும் இல்லாமல் படம் வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் டீன்ஸ் என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். அதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

தற்போது “நாந்தான் CM 2026 Onwards” என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். அதன் பிறகு அவர் தன்னுடைய அடையாளமாகவும் முதல் சூப்பர் ஹிட்டாகவும் அமைந்த ‘புதிய பாதை’ படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரம்மாண்ட அறிவியல் புனைகதை படம்… கைகோர்க்கும் ஏஜிஎஸ்- ப்ரதீப்பின் அடுத்த பட அப்டேட்!

இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகிறதா பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் படம்?

மீண்டும் வருகிறது ‘புதிய பாதை’… ரீமேக் செய்து நடிக்கும் பார்த்திபன்!

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments