Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

, சனி, 7 செப்டம்பர் 2024 (13:21 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் படத்தின் டிரைலர் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் கடல்சார் வாழ்வை முன்னிலைப்படுத்தும் கதைகக்ளமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்மூட்டி & கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!