இயக்குனர் ராஜேஷ் மற்றும் ஜீவா கூட்டணியின் வெற்றிப் படமான சிவா மனசுல சக்தி படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்து பணியாற்றுகின்றனர். நடித்த சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.
அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதையடுத்து இருவரும் இணைந்து வரும் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படம் இருவருக்கும் திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக இவானா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.