Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வரின் பயோபிக்கில் நடிக்கும் ஜீவா?... லேட்டஸ்ட் தகவல்!

முதல்வரின் பயோபிக்கில் நடிக்கும் ஜீவா?... லேட்டஸ்ட் தகவல்!
, வியாழன், 4 மே 2023 (09:32 IST)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த கோ, நண்பன்,ஈ உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தோடு மோதுகிறதா சூரியின் விடுதலை?