Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்ஸி சீரிஸில் நடிக்காமலேயே பாராட்டுகளைக் குவிக்கும் ஜீவா!

பார்ஸி சீரிஸில் நடிக்காமலேயே பாராட்டுகளைக் குவிக்கும் ஜீவா!
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:11 IST)
பார்ஸி சீரிஸ் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ஸி வெப் சீரிஸில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது பார்ஸி சீரிஸ் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் இந்த சீரிஸின் தமிழ் வடிவத்தில் கதாநாயகன் ஷாகித் கபூருக்கு டப் செய்துள்ளார் ஜீவா. மிக சிறப்பாக டப்பிங் என்பதே தெரியாமல் டப் செய்துள்ளதாக ரசிகர்கள் ஜீவாவைப் பாராட்டி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியாரா- சித்தார்த் திருமணத்துக்கு வித்தியாசமாக வாழ்த்திய RC15 படக்குழு!