Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீவா, சிவா & யோகி பாபு கூட்டணியில் ‘கோல்மால்’… வெளியான கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஜீவா, சிவா & யோகி பாபு கூட்டணியில் ‘கோல்மால்’… வெளியான கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
, திங்கள், 6 ஜூன் 2022 (12:47 IST)
ஒரு காலத்தில் மிகவும் பிஸியான இளம் நடிகர்களாக வலம் வந்துகொண்டிருந்தனர் சிவாவும், ஜீவாவும். ஜீவா எஸ் பி ஜனநாதன், ஷங்கர் மற்றும் கேவி ஆனந்த் ஆகிய கமர்ஷியல் இயக்குனர்களின் படங்களில் எல்லாம் நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து அவர் படங்கள் தோல்வி அடைந்ததால் அவருக்கு இப்போது கைவசம் நிறைய படங்கள் இல்லை. இதே நிலைதான் மிர்ச்சி சிவாவுக்கும்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கோல்மால் என்ற நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பொன்குமரன் என்பவர் இயக்க உள்ளார். இவர் கன்னடத்தில் பல படங்களை இயக்கியுள்ள நிலையில் தமிழில் கோல்மால் படத்தின் மூலமாக அறிமுகவாகவுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்போன்ஸ் இயக்கத்தில் நயன்தாரா, பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்ட்’… வெளியான ஃபர்ஸ்ட்லுக்