Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 ஆயிரத்தை தாண்டிய சிகிச்சை பெறுவோர்! – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

Advertiesment
25 ஆயிரத்தை தாண்டிய சிகிச்சை பெறுவோர்! – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!
, திங்கள், 6 ஜூன் 2022 (09:30 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,81,335 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,701 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,30,852 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 25,782 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுப்பாடிழந்து பள்ளத்தில் பாய்ந்த பேருந்து..! – சோகத்தில் முடிந்த பக்தி யாத்திரை!