Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்போன்ஸ் இயக்கத்தில் நயன்தாரா, பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்ட்’… வெளியான ஃபர்ஸ்ட்லுக்

அல்போன்ஸ் இயக்கத்தில் நயன்தாரா, பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்ட்’… வெளியான ஃபர்ஸ்ட்லுக்
, திங்கள், 6 ஜூன் 2022 (12:00 IST)
அல்போன்ஸ் புத்ரன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள கோல்ட் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

சமீபத்தில் கோல்ட் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், ரசிகர்களிடம் படத்தைக் காட்டுவதற்காக படக்குழு கடினமாக உழைத்து வருவதாகவும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதையடுத்து தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் படங்களின் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ்… முதலிடத்தில் ’விக்ரம்’… வெளியான தகவல்