ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது.
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல், தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் தாஜ்மஹாலில் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்களை ஆர்த்தி வெளியிட்டு காதலை பொழிந்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ஜெயம்ரவி இணையத்தில் வைரலாகி வருகிறார்.