Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி கொண்டாடிய ஹாட்ரிக் வெற்றி!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (08:25 IST)
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் வெற்றி விழா என்றால் அந்த படம் நூறு நாட்கள் அல்லது இருநூறு நாட்கள் ஓடிய பின்னரே நடைபெறும். ஆனால் தற்போது முதல் காட்சி முடிந்தவுடனே வெற்றி விழாவை திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.
 
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்கமறு' ஆகிய திரைப்படங்கள் அவரது வெற்றிப்பட பட்டியலில் இணைந்த நிலையில் நேற்று வெளியான 'கோமாளி' திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இதனையடுத்து நேற்றிரவு ஜெயம் ரவி, 'கோமாளி' படக்குழுவினர்களுடன் வெற்றி விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் ஜெயம் ரவியுடன் இயக்குனர் பிரதீப் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
 
'ஹாட்ரிக் வெற்றி' என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டிய ஜெயம் ரவி, அனைவருக்கு ஊட்டிவிட்டார். கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு வெற்றிக்காக பல இளம் நடிகர்கள் தவித்து வரும் நிலையில் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
'கோமாளி' திரைப்படம் நேற்றைய முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுள்ளதாகவும், சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனத்தால் இன்றும் நாளையும் வசூல் மழை பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments