ஜெயம் ரவி & கணேஷ் கே பாபு இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்து வெளியான அப்டேட்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (14:06 IST)
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியான நிலையில் அடுத்து ஜீனி ரிலிஸுக்குக் காத்திருக்கிறது. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ரிலீஸான அவரின் படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வட சென்னையை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படமாவது ஜெயம் ரவிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஹிட் படமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments