Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் - நயன்தாரா வழக்கு: நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (11:46 IST)
நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் இந்த  வழக்கு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய தயாரிப்பில் உருவான படத்தின் காட்சிகள் இருப்பதாகவும் அனுமதி இன்றி அந்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் நயன்தாரா ஆவணப்பட விவகாரத்தில் தனுஷின் வழக்கை நிராகரிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் மனு தாக்கல் செய்த நிலையில் அதை ஏற்க  சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறாரா விஜய் சேதுபதி… மணிகண்டன் கைவிட்ட வெப்சீரிஸ் அப்டேட்!

அதிகம் ட்ரெண்டாகி வரும் ’ச்சீ ச்சீ ச்சின்’ பாடல்.. அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

சூர்யா 47 படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய்ப் பரவும் தகவல்!

இறுதிகட்டத்தை நெருங்கும் பாண்டிராஜ் & விஜய சேதுபதி படம்… ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்