12 வயது, 14 வயது, 16 வயது சிறுமிகளை காதலித்து தனிமையில் அழைத்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தன்னுடைய தோழியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் அந்த சிறுமி திடீரென நாம் காணவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுமியின் மொபைல் போனை டிராக் செய்த போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது தாங்கள் தேடி வந்த சிறுமி உள்பட 3 சிறுமிகள் அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது, 14 வயது, 16 வயது ஆகிய மூன்று சிறுமிகளுடன் மூன்று நபர்கள் காதலர்கள் என கூறி தனிமையில் இருந்தனர்.
இதனை அடுத்து 21 வயது கரிமுல்லா, 19 வயது அபிஷேக் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற இருவரையும் சிறையில் காவல்துறையினர் அடைத்ததாக தெரிகிறது.