விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

Bala
வெள்ளி, 7 நவம்பர் 2025 (19:29 IST)
ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் கோட் திரைப்படத்திற்கு பின்  ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் பாலையா நடித்து வெளிவந்த பகவத் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதே முடிந்துவிட்டாலும் மூன்று போஸ்டர்களை தவிர வேறு எதைவும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இந்த படத்தின் முதல் பாடலை போன மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரூர் சம்பவம் காரணமாக அதை தள்ளி வைத்தனர். அதோடு எப்படியும் இந்த படம் 2026 ஜனவரி பொங்கலுக்குதான் என்பதால் அப்டேட்டுகளை கொடுக்க நேரமிருக்கிறது என நினைத்து விட்டார்களா தெரியவில்லை.
 
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளதாக அனிருத்தே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இந்த பாடலுக்கு தளபதி கச்சேரி என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பாடலை விஜயே பாடியிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
 
கரூர் சம்பவத்தால் விஜய் ஒரு மாத காலம் வீட்டிலேயே முடங்கியிருந்தார். அதன்பின் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் அதிலிருந்து மீள துவங்கியிருக்கிறார். சமீபத்தில் கூட மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வழக்கம் போல் திமுகவுக்கு எதிராக பேசினார் விஜய். எனவே அவரின் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்திருக்கிறது. தற்போது ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது. அநேகமாக இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments