மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது அறிக்கையில், விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை "காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்" என்றும், "ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்" என்றும் வைகோ சாடியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
"பொது வாழ்வில் ஆத்திச்சூடி சூட்சுமம் அறியாதவர் விஜய்," என்று கூறியுள்ள வைகோ, அவரை "பொறுப்பற்ற விஜய்" என்று நேரடியாக விமர்சித்துள்ளார்.
"கரூர் துயரத்திற்குக் முழு காரணமான விஜய்)பொறுப்பற்று திசை திருப்புகிறார்," என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.ஆட்சிக்கு வந்துவிட்டதை போலவே கனவுகளிலும், கற்பனையான வாழ்விலும் திலைக்கிறார்," என விஜய்யின் அரசியல் நிலைப்பாடு உறுதி அற்று இருப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ம.தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரை வைகோ, நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாகவும், அவர் அரசியலில் மிகப் பெரிய உந்து சக்தியாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை, விஜய்யின் அரசியல் வாழ்வை கடுமையாக விமர்சிப்பதாகவோ அமைந்துள்ளது.