Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிவாதத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் பாடிய ஜானகி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:47 IST)
1950-களின் இறுதியில் தொடங்கி 1980, 1990-களில் உச்சத்தில் இருந்தவர் பாடகி எஸ்.ஜானகி. இவரது கொஞ்சும் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. 
 



தற்போது 80 வயதாகும் ஜானகி, இனி சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதில்லை என கடந்தாண்டு அறிவித்து விட்டு, ஐதராபாத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். 
 
இந்நிலையில் தனது கட்டுப்பாட்டை தளர்த்திவிட்டு மீண்டும் பாட வந்துள்ளார்.  டி.ஆர்.பழனிவேலன் என்பவர் இயக்கும் 'பண்ணாடி' என்ற படத்தில் பாடகி எஸ்.ஜானகி ஒரு பாடலை பாடியுள்ளார். இதில் ஆர்.வி.உதயகுமார், வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழனிவேலன் தயாரிக்கிறார். 
 
படத்திற்கு இசையமைக்கும், ராஜேஷ் ராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது,‘எஸ்.ஜானகியை அணுகிய போது, புதிய பாடகிக்கு வாய்ப்பு தரும்படி வலியுறுத்தினார். அவர்தான் பாட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதால், பாட ஒப்புக்கொண்டார்' என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments