Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ் ராமகிருஷணனுக்குப் படைப்பாளிகள் பாராட்டு விழா

சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ் ராமகிருஷணனுக்குப் படைப்பாளிகள் பாராட்டு விழா
, திங்கள், 10 டிசம்பர் 2018 (12:45 IST)
சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷணனுக்கு படைப்பாளிகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.

ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை செலுத்தும் படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் விருதினை வழங்கி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருதினை இந்தாண்டு தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷணன் அவர்கள் பெற்றுள்ளார்.

எஸ். ரா எழுதிய சஞ்சாரம் எனும் நாவலுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. கரிசல் பகுதியில் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களின் வறுமைப் படிந்த நாடோடி வாழ்க்கையை பதிவு செய்த நாவல் இது.
webdunia

இந்த விருதினைப் பெற்ற எஸ் ராவுக்கு தமிழ் படைப்பாளிகள் சார்பாக நாளை (டிசம்பர் 11)மாலை 6 மணிக்கு கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழின் மூத்தப் படைப்பாளிகளான் ச. கந்தசாமி, நடிகர் சிவக்குமார், இடது சாரி இயக்கத்தோழர் சி மகேந்திரன், சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, இயக்குனர் லிங்குசாமி, இந்து தமிழ் ஆசிரியர் சம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு எஸ் ராவைக் கௌரவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலியன் விண்கலத்தை கண்டறிந்து சாதனை ...திகில் நிறைந்த திருப்பங்கள்