பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பயனர்களுக்கு தினமும் 2.1 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பம்ப்பர் ஆஃபரை ஜனவரி 31, 2019 வரை நீட்டிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னதாக தினமும் 2.2 ஜி.பி. டேட்டா வழங்கிய சலுகையில் தற்சமயம் 2.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் இரண்டு பிரீபெயிட் சலுகைகளில் சேர்க்கப்படுகிறது.
முன்னதாக 11 பிரீபெயிட் சலுகைகளுக்கு பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 ஆண்டு பிரீபெயிட் சலுகைகளில் பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. மேலும் இவை முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன.
அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகள் தற்சமயம் முறையே தினமும் 4.1 ஜி.பி. மற்றும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்குகின்றன.
பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் கீழ் பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை தேர்வு செய்திருப்போருக்கு பம்ப்பர் ஆஃபரின் கீழ் தினமும் 3.1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் எஸ்.டி.வி. சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 உள்ளிட்ட சலுகைகளுக்கு பம்ப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் பலன்களை, பழைய விலைக்கே வழங்கியது. இந்த நடவடிக்கை அந்நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.