கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழு ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமாமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குழு அமைத்துள்ளது.
இந்த குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, ப்ரஜ் லால் ஆகிய எம்பிக்கள் உள்ளனர் என்பதும் இவர்கள் உடனடியாக கரூர் வந்து விசாரணையை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.