Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''அஜித்-61 ''பட தலைப்பு இதுதானா? அட சூப்பரா இருக்கே!!

''அஜித்-61 ''பட தலைப்பு இதுதானா? அட சூப்பரா இருக்கே!!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (22:55 IST)
அஜித் 61 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.இப்படத்திற்கு வலிமைக்கு பின்னணி இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், 'அஜித்குமாரின் 61' பட வேலைகள் மும்முரமாக  நடந்து வருகிறது.  ஆந்திராவில் உள்ள  ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்படத்திற்குப் பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது.

வில்லன்,அட்டகாசம், அசல் படத்தைப் போல் இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு பாரதியாரின் கவிதையில் இருந்து வல்லமை என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர்.

இப்படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் படத்தின் நடிக்க முன்னணி நடிகைக்கு ரூ.10 கோடி சம்பளம் !