Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ திரைப்படம்!

தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ திரைப்படம்!
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:47 IST)
ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. முதலில் சென்னையில் சில நாட்களுக்கு நடந்து, அதன் பின்னர் ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் ஒன்றில் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்குவதில் ஒரு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து மூன்று படம்?