Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி- நெல்சன் கூட்டணியின் ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!

ரஜினி- நெல்சன் கூட்டணியின் ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!
, புதன், 13 ஜூலை 2022 (10:34 IST)
ரஜினியை வைத்து இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக செட் தற்போது அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” மஹா ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஹன்சிகா நெகிழ்ச்சி