Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணிவு பட முதல் சிங்கில் #ChillaChilla ரிலீஸ் எப்போது?

Advertiesment
thunivu second
, வியாழன், 24 நவம்பர் 2022 (21:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜித், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.

சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள ‘’சில்லா சில்லா’’ என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இப்பாடலை வெளியிடும் முனைப்பில் துணிவு படக்குழு உள்ள நிலையில், சமீபத்தில், ‘’சில்லா சில்லா’’ பாடலை எழுதிய வைசாக் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில்,  டிசம்பர் மாதம் முதல்  வாரம் துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா#ChillaChilla என்ற பாடல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்பாடல் ஷூட்டிங் நடந்த இடத்தில் எடுகப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், இப்பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

மேலும், வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் இப்படத்திற்கு நள்ளிரவு காட்சியாக வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் பட #Alakadal வீடியோ பாடல் நாளை ரீலீஸ்