நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன் நேற்று இரவு காய்ச்சல் ஜலதோஷம் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் ஒருசில நாள் அவர் ஓய்வு பெற்ற பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இதனை அடுத்து கமல்ஹாசன் நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்பு இருக்கும் நிலையில் அதில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது