Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனிருத் ஸ்டுடியோவில் ரஜினி… மனசிலாயோ பாடலில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

அனிருத் ஸ்டுடியோவில் ரஜினி… மனசிலாயோ பாடலில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

vinoth

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:08 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் தேதியை வேட்டையன் படக்குழு உறுதி செய்துள்ளது.

இதையடுத்து விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகும் என அனிருத் அறிவித்திருந்தார். இந்நிலையில் அனிருத்தின் ஸ்டிடியோவில் ரஜினி பாடல் பாடுவது போனற புகைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இதனால் அந்த பாடலில் ரஜினி பாடியுள்ளாரா, அல்லது ஜெயிலரின் ஹூக்கும் பாடல் போல பாடலுக்கு இடையில் குரல் மட்டும் கொடுத்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு: ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கோரியதால் பரபரப்பு..!