Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள் – நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

Advertiesment
ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள் – நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (11:36 IST)
தெலங்கானாவில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சனிகபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலையின் கீழே இறந்த நிலையில் 30 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தனை குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதால் யாரேனும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குரங்குகளின் கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் குரங்குகளின் உடல்கள் மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாத்தா ஊரிலிருந்து அரசியல் பயணம்! – உதயநிதியின் சூறாவளி சுற்றுப்பயணம்!