Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை நஸ்ரியாவுக்கு மனநிலை கோளாறா? மன்னிப்பு கேட்டு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு..!

Advertiesment
நஸ்ரியா

Mahendran

, வியாழன், 17 ஏப்ரல் 2025 (10:41 IST)
நடிகை நஸ்ரியா மன்னிப்பு கேட்டு வெளியிட்ட கடிதத்தின் மூலம் அவருக்கு மனநல கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் படிப்படியாக குணம் ஆகி வருவதாகவும் கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
நீங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் சில நாள்களாக பொதுவெளியில் வராதது தொடர்பாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். 
 
எனது 30-வது பிறந்த நாள், புத்தாண்டு மற்றும் சூட்சம தர்ஷினி படத்தின் வெற்றிவிழா மற்றும் பல முக்கியமான தருணங்களை கொண்டாடுவதை தவறவிட்டேன். நான் பொதுவெளியில் வராதது தொடர்பாக விளக்கம் அளிக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்கும் செய்திகளுக்கு பதிலளிக்காததற்கும் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
 
 நான் முழுமையாக முடங்கியிருந்தேன்.பணி நிமத்தமாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்த சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு நான் வருந்துகிறேன்.
 
சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது எனக்கு கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி மற்றும் சக வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்த கடினமான பயணத்தில் நாளுக்குநாள் குணமடைந்து வருகிறேன். உங்கள் புரிதலையும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன். 
 
முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். ஆனால், மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன்.உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்களின் எல்லையில்லா ஆதரவுக்கு நன்றி. இவ்வாறு நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!